சக கவிஞர் கவிதையியல் குறித்த நேர்காணல்கள் - மௌனன் யாத்ரிகா
மொழி வந்தடைந்த இடமாகவும், மனிதனின் சிந்தனை வந்தடைகின்ற இடத்தினையும் இருப்பினையும் கவிதையும், கவிஞர்களுமே காலந்தோறும் நம்முள் வெளிச்சத்தை துாண்டுகின்றனர்.
அந்தவகையில் சக கவிஞர்கள் என்னும் நுாலின் வழியாக மௌனன் யாத்திரிகா அவா்கள் தமிழில் நவீன கவிஞர்களை சந்தித்து அவர்களின் எழுத்து மற்றும் எண்ண அலைகளை நேர்காணல் வழியாக நமக்கு தொகுத்துத் தந்துள்ளார். இந்த பணியானது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. ஏன் என்றால் நவீன கவிஞர்கள் பற்றி அறியவும், அவர்களின் கவித்துவப் போக்கு குறித்து அறியவும் முடியும். புதிய கவிஞர்களை நேர்காணலின் வழி அவர்களின் சிந்தனைப் போக்கு மற்றும் கவிதை மனநிலையையும் அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாகவும் இது அமைகின்றது.
இந்நுாலின் ஆசிரியர் தமிழ் கவிதைவெளியில் நன்கு அனைவராலும் அறியப்பட்டவர் ஆவார். மௌனன் யாத்ரிகா அாியலுார் மாவட்டம் செந்துறையில் வசிக்கிறார். இவர் திரைத்துறையிலும் தீவிரமாக செயல்பாட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது,
கவிஞர்களை பட்டியயிடுதல் என்பது மிகவும் சுலபமான செயல்பாடு அன்று. அது நீண்ட நெடிய நேரத்தையும் காலத்தையும் பிடிக்கும். அந்த வகையில் இன்றைய காலச்சூழலுக்கு அவசியமான ஒன்றாக கவிஞர்களை அறிமுகம் செய்தும் அவர்களின் கவிதை நோக்கம் மற்றும் செயல்பாடுகளை நேர்காணல் வழி நாம் அறிந்து கொள்ள இது எளிதாக அமைந்துள்ளது. இத்தகைய முயற்சியை எடுத்த கவிஞர் மௌனன் யாத்ரிகாகவிற்கு நன்றி.
சிற்பி பாலசுப்பிரமணியன், இந்திரன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், ஆத்மார்த்தி, யவனிகா ஸ்ரீராம், வெய்யில், பெருமாள் முருகன், க.மோகனரங்கன், ரவிசுப்பிரமணியன், அய்யப்ப மாதவன், ரமேஷ் பிரேதன், அழகிய பொியவன், ஆத்மாா்த்தி, இளம்பிறை, மகுடேசுவரன், யாழன் ஆதி, அமிா்தம் சூர்யா, ஸ்ரீநேசன், அசதா, அன்பாதவன், கவிதைக்காரன் இளங்கோ, ஸ்டாலின் சரவணன், பெருந்தேவி, நாச்சியாள் சுகந்தி என நீண்டதொரு பட்டியல் தொடர்கின்றது. இப்பட்டியலில் இடம் பெறாத முக்கிய கவிஞர்களும் இடம் பெற கூடும். ஆயினும் கவிஞர்கள் குறித்து அறிய முற்படும் வாசகா்களுக்கு இந்த நுால் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
இந்நுாலின் நேர்காணலில் இடம்பெறும் சில கருத்து தெறிப்பினை மட்டும் கூறி இந்நுாலின் முக்கியத்துவத்திற்கு சான்றாக வந்தமைகின்றது.
ஒரு கவிதை எந்தக் காரணத்துக்காகப் படைக்கப்படுகிறது என்பதைவிட கவிதைப் பிரதியின் தன்மை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியமானதாகி விடுகிறது. - கவிஞர் இந்திரன்
உணவில் சைவம் என்பது தாவரவுண்ணிகளாகவும் அசைவம் என்பது புலாலுண்ணிகளாகவும் பிாிந்துநின்றாலும் எல்லா உணவும் இயற்கை விளைவேயாகும். - கவிஞர் ரமேஷ் பிரேதன்
நீதியுணா்ச்சி அல்லது உண்மையை அறியும் திறன் இல்லாதவா்கள் கலை வடிவங்களை உருவாக்குவதற்குத் தகுதி இல்லாதவா்கள். - கவிஞர் அழகிய பெரியவன்
உண்மையில் மானுட வாழ்வு என்பதே மாபொிய சூன்யத்திற்கு இலக்கமிட்டுப் பாா்க்கிற ஒரு விளையாட்டுத் தான். - கவிஞர் ஆத்மார்த்தி
இந்தியாவில் செவ்வியல் என்பது சாதி,சமய,பக்தி, ஒழுக்கவாத,நீதியியல் அழகியலாகவும் பாதுகாக்கப்படுகிறது. - கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
கவிஞர் என்றால் அவர்தான் ஆகச்சிறந்த அறிவுஜுவி அச்சமூகத்தின் அறிவு மரபின் நீட்சியும் அடையாளமும் என்றே அர்த்தங்கள். -கவிஞர் குட்டிரேவதி
தமிழ்க் கவிதையின் சமகால போக்குகள் குறித்து அறிய அவசியம் வாசிக்க வேண்டிய பனுவல் இது.
***********************************************************************************
தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துகள் 💐💐💐
பதிலளிநீக்கு