வெள்ளி, 17 ஜனவரி, 2025

மானுட வாசிப்பு - தொ.பரமசிவன்


மானுட வாசிப்பு - தொ.பரமசிவன்


             தொ.பரமசிவன்  - தொ.ப என்று ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் நேர்காணல் செய்த தொகுப்பினை மானுட வாசிப்பு என்ற தலைப்பில் வாசிக்க நேர்ந்தது. பனுவலை வாசித்த பின்பு அது குறித்த சில கருத்துகளை மட்டுமே இங்கு பதிவிடலாம் என்ற ஆசையில் இப்பதிவு.

     இப்பனுவலில் உள்ளடக்கமாக  அரசியல் -சாதி- மதம், பண்பாடு, புழங்கு பொருள் பண்பாடு, உணவு, ஆளுமைகள், சித்தர் இலக்கியம், கல்வி, மொழி, சுற்றுச்சூழல், தலித்தியம்,பெரியாரியம், தமிழ்த்தேசியம், நாட்டார் வழக்காற்றியல், கோவில், அழகர்கோவில், பாரதியார்,குடும்பம், சமூகம் என  18 தலைப்புகள்  அமைகின்றது.

        அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்கள் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் தத்துவவாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. சங்கரர், மாத்துவர், இராமானுஜர் இவர்களை தவிர்த்து என்கிறார். சாதிகள் தலைதுாக்கியது பக்தி இயக்கத்தோட எழுச்சி பிறகு.

    தெய்வம் என்று சொல்லக்கூடிய வார்த்தை தான் பழையது. கடவுள் என்று சொல்லக்கூடாது என்கிறார். சமண மதம் வீழ்ச்சிக்கான காரணங்களாக அளவுக்கு மீறிய துறவும், ஒழுக்கமும் என்கிறார்.

        முருக, கணபதி வழிபாடு குறித்தும், மதமாற்றம் குறித்தும், சைவ மதத்தின் தோற்றம் குறித்தும், தமிழக வணிகக் குழுக்களில் ஒன்றான அஞ்சு வண்ணத்தவர்கள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.  மாடு அடக்குதல் என கூற கூடாது. மாடு அணைதல் என்பதே சரி என்றும், தை முதல் நாள் அல்ல, தைப்பூசம் தான் தமிழர்களுடைய ஆண்டின் தொடக்க நாள் என்கிறார் தொ.ப

    மனித வாசிப்பே பண்பாட்டு ஆய்வு என்கிறார். இவ்வாறு 103 பக்கங்களை கொண்டது இப்பனுவல்.  பல துறை அறிவினை ஒரே தொகுப்பில் அடக்கி தருவது வாசகனுக்கு விருந்தாக அமைகின்றது எனலாம். 

💚💚💚





இந்தி ஒரு வரலாற்றுச்சுருக்கம் - கார்த்திக் புகழேந்தி

 

   இந்தி ஒரு வரலாற்றுச்சுருக்கம் - கார்த்திக் புகழேந்தி 


            இந்தி என்றவுடன் நமக்கு மொழி எதிா்ப்பு என்ற ஒன்றுமட்டுமே நமது பிரஞ்கையில் உதயமாகும்.  அதன் மூலம் மற்றும் பின்னணி குறித்த காரணத்தை நம்மை அறியச்செய்யும் துாண்டல் பணியினை இந்நுால் நிச்சயமாக செய்கின்றது.

     பொதுதளத்தில் அனைவரும் இந்தி பற்றியும், அதன்  தோற்றம் மற்றும் மொழி உருவான விதம் குறித்தும் அறியவும், இந்தித் திணிப்பின் பின்புலம், அதன் காரணம், மொழிப்பாகுபாடு, மொழிப்போராட்டப்பின்னணி, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மொழிப்போர் தியாகிகள் சிலர் குறித்த பதிவு என இக்குறுநுாலில் இவ்வளவு நீண்ட  கால வரலாற்றின் தகவல்களை செறிவாக கவனப்படுத்திய பாங்கு இங்கு பாராட்டுக்குரியது.

        ஒரே நாடு ஒரே மொழி என்ற சொல்லாட்சிக்கு பின் நிகழ்ந்த நிகழக்கூடிய பதற்றம் நுாலினை வாசித்த பொழுது நம்முள் தொற்றிக்கொள்கிறது. நுாலிலிருந்து “இந்தியைப் புகுத்துவது என்பது அரசியல் உணர்ச்சியால் அல்ல கலாச்சார உணர்ச்சியால். இந்தியை நாம் வன்மையாக எதிர்ப்பதும் அதே கலாசார உணர்ச்சியால்தான்” என்றார் பெரியார். இன்று அரசியல் உணர்ச்சியும் அதில் மேலோங்கியிருக்கிறது. 

    பல மொழிகளை கொன்று குவித்து இன்று இம்மொழி தம்மை உயர்வாக காண்பித்துக்கொள்ள முயலுகின்றது. இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய அரசியல் சூழலில் நமக்கு நாம் பேசக்கூடிய மொழி குறித்த அக்கரையும் விழிப்புணர்வும்    அவசியமாகின்றது. அதற்கு இத்தகைய நுாலினை வாசித்தல் அவசியமாகும். 

    மற்றொரு மேற்கோள் நுாலிலிருந்து  ஹிட்லரின் படைகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது அடிமைப்படுத்தபட்ட பிரதேசங்களில் ஜெர்மன் மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஒரே ஆட்சி ஒரே கலாசாரம் ஒரே மொழி என்பது பாசிசத்தின் முக்கியக் கொள்கை. 

    மாநில அரசின் செயல்பாட்டிற்கு நிதி தேவையின் போது ஒன்றிய அரசானது துவக்கத்திலிருந்தே  மொழிக்காக ஒதுக்கும் நிதியில் தமிழுக்கு அநீதி செய்துள்ளமையை சான்றுடன் இந்நுாலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் நீதிக்கட்சி தொடங்கி சமகால கழக ஆட்சியாளர்கள் வரை தமிழ்மொழிக்கு  அலுவலகம் தொடங்கி கல்விநிலையங்கள் வரை அதற்கான அங்கீகாரம் பெற்றுத்தந்த வரலாற்றையும் குறிப்புகளாக காணமுடிகின்றது.

இந்நுால் மொழி குறித்தான அக்கறையை வாசிக்கின்ற பொழுது ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

🌳🌳🌳

  














  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...