மானுட வாசிப்பு - தொ.பரமசிவன்
தொ.பரமசிவன் - தொ.ப என்று ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் நேர்காணல் செய்த தொகுப்பினை மானுட வாசிப்பு என்ற தலைப்பில் வாசிக்க நேர்ந்தது. பனுவலை வாசித்த பின்பு அது குறித்த சில கருத்துகளை மட்டுமே இங்கு பதிவிடலாம் என்ற ஆசையில் இப்பதிவு.
இப்பனுவலில் உள்ளடக்கமாக அரசியல்
-சாதி- மதம், பண்பாடு, புழங்கு பொருள்
பண்பாடு, உணவு, ஆளுமைகள், சித்தர் இலக்கியம், கல்வி, மொழி,
சுற்றுச்சூழல், தலித்தியம்,பெரியாரியம், தமிழ்த்தேசியம், நாட்டார்
வழக்காற்றியல், கோவில், அழகர்கோவில்,
பாரதியார்,குடும்பம், சமூகம்
என 18 தலைப்புகள் அமைகின்றது.
அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்கள்
பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் தத்துவவாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
சங்கரர், மாத்துவர், இராமானுஜர்
இவர்களை தவிர்த்து என்கிறார். சாதிகள் தலைதுாக்கியது பக்தி இயக்கத்தோட எழுச்சி
பிறகு.
தெய்வம் என்று சொல்லக்கூடிய வார்த்தை தான் பழையது. கடவுள்
என்று சொல்லக்கூடாது என்கிறார். சமண மதம் வீழ்ச்சிக்கான காரணங்களாக அளவுக்கு மீறிய
துறவும், ஒழுக்கமும் என்கிறார்.
முருக, கணபதி வழிபாடு
குறித்தும், மதமாற்றம் குறித்தும், சைவ
மதத்தின் தோற்றம் குறித்தும், தமிழக வணிகக் குழுக்களில்
ஒன்றான அஞ்சு வண்ணத்தவர்கள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மாடு அடக்குதல் என கூற கூடாது. மாடு அணைதல் என்பதே சரி என்றும், தை முதல் நாள் அல்ல, தைப்பூசம் தான் தமிழர்களுடைய
ஆண்டின் தொடக்க நாள் என்கிறார் தொ.ப
மனித வாசிப்பே பண்பாட்டு ஆய்வு என்கிறார். இவ்வாறு 103
பக்கங்களை கொண்டது இப்பனுவல். பல துறை
அறிவினை ஒரே தொகுப்பில் அடக்கி தருவது வாசகனுக்கு விருந்தாக அமைகின்றது எனலாம்.
💚💚💚

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக